உள்ளூர் செய்திகள்

அரியலூர் மக்கள் குறைதீர் கூட்டம்

Published On 2023-08-29 12:03 IST   |   Update On 2023-08-29 12:03:00 IST
  • அரியலூர் மக்கள் குறைதீர் கூட்டம் 357 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது
  • மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவு

அரியலூர் 

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கோரிக்கைகள் அடங்கிய 357 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கலெக்டரால் அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாயர் அலுவலர்கலைவாணி, தனித்துணை ஆட்சியர்இளங்கோவன், மாவட்ட வழங்கல் அலுவலர்ராமலிங்கம், மாவட் ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உமாமகேஸ்வரன் மற்றும் அனைத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News