உள்ளூர் செய்திகள்

பட்டாசு ஆலையில் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி

Published On 2023-10-10 06:22 GMT   |   Update On 2023-10-10 06:22 GMT
  • பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
  • அமைச்சர்கள் எஸ்.எஸ். சிவசங்கர், சி.வி.கணேசன் ஆகியோர் காயமடைந்தோரை மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல்

தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் மாவட்டம், வெற்றியூர் மதுரா, விரகாலூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில்  ஏற்பட்ட தீவிபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்ற  துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். விபத்து நடைபெற்ற  இடத்திற்குச் சென்று. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகிய இருவரையும் அனுப்பி வைத்துள்ளேன். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐந்து நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு. அவர்களது  குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம்  ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயம்  அடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News