உள்ளூர் செய்திகள்

அரியலூரில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

Published On 2022-07-02 12:04 IST   |   Update On 2022-07-02 12:04:00 IST
  • அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  • சாலையின் இருபுறங்களிலும் மழை நீர் தடையின்றி செல்லும் வகையில் வரத்துவாரிகளை முறையாக தூர்வாரவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதஅலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் அரியலூர் ஊராட்சி ஒன்றியம், கயர்லாபாத் ஊராட்சியில் கயர்லாபாத் - மண்டையன்குடிசல் சாலையில் தார் சாலை மற்றும் பாலம் அமைத்தல் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பணியையும், பெரியநாகலூர் ஊராட்சியில், பெரியநாகலூர் - அய்யனார் கோவில் சாலை பலப்படுத்துதல் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பணியையும் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், இந்த ஆய்வின் போது சாலைப்பணிகளை முறையாக பராமரிக்கவும், சாலையின் இருபுறங்களிலும் மழை நீர் தடையின்றி செல்லும் வகையில் வரத்துவாரிகளை முறையாக தூர்வாரவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதஅலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவி, குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News