உள்ளூர் செய்திகள்
வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
- வாலிபரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள புளியங்குழி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சீமான்(வயது 28). விவசாயியான இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் சிரஞ்சீவி என்பவருக்கும் ஜல்லிக்கட்டு காளை விடுவதில் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று சீமானுக்கும், சிரஞ்சீவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சீமானை சிரஞ்சீவி மற்றும் அவரது உறவினர்கள் ஆனந்தராஜ், கதிரேசன் ஆகிய 3 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சீமான் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் சீமான் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.