உள்ளூர் செய்திகள்

சான்றிதழ் பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் பாராட்டிய காட்சி.

பேரிடர் மேலாண்மை முகமையில் பங்கேற்ற திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு

Published On 2022-09-16 09:37 GMT   |   Update On 2022-09-16 09:37 GMT
  • ஆபத்துக்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும்? என்று பயிற்சி அளிக்கப்பட்டது.
  • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி தன்னார்வலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்.

திருச்செந்தூர்:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை முகமை மூலம் 12 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்.231 (சுயநிதிப்பிரிவு) மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தை (சுயநிதிப்பிரிவு) சேர்ந்த 20 தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம், பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளில் வைத்து சிறப்பு பயிற்சியாளர்களை கொண்டு பேரிடர் காலங்களில் ஏற்படும் புயல், மழை, வெள்ளம் மற்றும் தீ ஆகிய ஆபத்துக்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும்? என்று பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி தன்னார்வலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார். இந்த மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், நாட்டுநலப் பணித்திட்ட அதிகாரி ஜெயராமன், இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அதிகாரி பார்வதிதேவி மற்றும் சுயநிதிப்பிரிவு வணிகவியல் துறை தலைவர்கள் சிரில் அருண், திருச்செல்வன், பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News