உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் போதை பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்று மாணவர்கள் கையெழுத்திட்டு உறுதிமொழி ஏற்ற போது எடுத்த படம்.

காயல்பட்டினம் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

Published On 2023-06-27 08:44 GMT   |   Update On 2023-06-27 08:44 GMT
  • ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார்.
  • கூட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்று கையெழுத்திட்டு உறுதிமொழி ஏற்றனர்.

ஆறுமுகநேரி:

உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை தரைப்பிரிவு மற்றும் கடற்படை பிரிவு சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

தேசிய மாணவர் படை தரைப்படை பிரிவு அலுவலர் சேக்பீர் முகமது காமில் வரவேற்று பேசினார். ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் செய்யது மொய்தீன் போதை பொருட்களின் தீமைகளை குறித்து பேசினார்.

கூட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்று கையெழுத்திட்டு உறுதிமொழி ஏற்றனர். முடிவில் தேசிய மாணவர் படை கடற்படை பிரிவு அலுவலர் ஜமால் முகம்மது நன்றி கூறினார்.

Tags:    

Similar News