உள்ளூர் செய்திகள்

முகாமில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கிய காட்சி.

தென்காசி மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்-கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2023-11-07 08:24 GMT   |   Update On 2023-11-07 08:24 GMT
  • கலெக்டர் ரவிச்சந்திரன் கால்நடை நல அட்டைகளை கால்நடை வளர்ப்போருக்கு வழங்கினார்.
  • முகாமில் தென்காசி கோட்ட உதவி இயக்குநர் மகேஷ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் இலஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட முதலாளி குடியிருப்பில் தொடங்கி வைத்து கோமாரி பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரதிகளை வெளியிட்டு வழங்கினார்.

கால்நடை நல அட்டைகளை கால்நடை வளர்ப்போருக்கு வழங்கினார். மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் சுமார் 135 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த்தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 46 குழுக்கள் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஏற்படுத்தப்பட்டு உள்ளாட்சித்துறை, பால்வளம் மற்றும் ஆவின் உடன் இணைந்து செயலாற்ற உள்ளது.

எனவே பொதுமக்கள் தங்கள் ஊரில் தடுப்பூசி போட குழுவினர் வரும்போது அனைத்து மாடுகளுக்கும் தடுப்பூசி போட்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.

முகாமில் தென்காசி கோட்ட உதவி இயக்குநர் மகேஷ்வரி, கால்நடை உதவி மருத்துவர்கள், வெள்ளைப்பாண்டி,செல்வகுத்தாலிங்கம், சிவகுமார், புனிதா, அருண்பாண்டியன், கால்நடை ஆய்வாளர்கள் அருண்குமார், பூமாரிசெல்வம், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், மாடசாமி, அந்தோணியம்மாள், இலஞ்சி பேரூராட்சித் தலைவர் சின்னத்தாய், துணை ஊராட்சி மன்றத்தலைவர் முத்தையா, வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி, வல்லம் ஊராட்சிமன்றத்தலைவர் ஜமீன் பாத்திமா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News