உள்ளூர் செய்திகள்
ஆஞ்சநேயர் கோவில் மண்டல பூஜை நிறைவு
- கோ பூஜையும், பெண்கள் பால்குடம் எடுத்தலும் நடந்தது.
- அனைவருக்கும் அன்ன தானம் வழங்கபட்டது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை அருகே கலுகோப சந்திரம் அடுத்துள்ள பெனசப்பள்ளி கிராமத்தில் 16 அடி உயரத்தில் ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் சாமிக்கு புதிதாக கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் விழா நிறைவடைந்தது. 48-வது நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.
இதையொட்டி நேற்று காலை கோ பூஜையும், பெண்கள் பால்குடம் எடுத்தலும் நடந்தது. தொடர்ந்து கணபதி பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹா பூர்ணாஹிதி, மஹா–அபிஷேகம், தீபாரதனை, தீர்த்த பிரசாதம் வழங்க பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டு அருள் பெற்ற னர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கபட்டது.