உள்ளூர் செய்திகள்

குடிப்பழக்கத்தை நிறுத்த சொல்லி தாய் வீட்டிற்கு மனைவி சென்றதால் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவர்

Published On 2023-10-18 07:14 GMT   |   Update On 2023-10-18 07:14 GMT
  • வினோதன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலா ளராக உள்ளார்.
  • மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் தீக்குளிக்க போவதாக கூறியுள்ளார்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் அங்குசெட்டிபாளையம் கிராம த்தை சேர்ந்தவர் வினோதன் (வயது 27), ஆட்டோ டிரைவர். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலா ளராக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.இவர் நேற்று மதியம் 3 மணியளவில் பண்ருட்டி ராஜானி சாலையில் நோ பார்க்கிங்கில் ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். அங்கு வந்த போக்குவரத்து போலீசார், ஆட்டோவை போலீஸ் நிலையம் எடுத்துவர கூறியுள்ளனர். ஸ்கூல் சவாரி உள்ளதால், மாணவர்களை வீட்டில் விட்டுவிட்டு போலீஸ் நிலையம் வருவதாக கூறி சென்றுள்ளார். பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு அவரவர் வீட்டில் விட்டுவிட்டு, வீடு திரும்பியு ள்ளார். அப்போது அவர் குடித்துவிட்டு வந்ததை அறிந்த அவரது மனைவி அம்சவள்ளி அதனை கண்டித்துள்ளார். போலீசார் கண்டித்ததாலும், ஆட்டோவை போலீஸ் நிலையம் எடுத்துவர சொன்னதாலும் குடித்ததாக வினோதன் அம்சவள்ளி யிடம் கூறினார்.

இதில் ஆத்திரமடைந்த அம்சவள்ளி, உன்னுடன் நான் வாழமாட்டேன் எனக் கூறி குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து இரவு 8 மணிக்கு தனது ஆட்டோவை எடுத்துக் கொண்டு பண்ருட்டி 4 முனை சந்திப்பிற்கு வந்த வினோதன், கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த டீசலை தன் மீது ஊற்றிக் கொண்டார். மேலும், மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் தீக்குளிக்க போவதாக கூறியுள்ளார். அங்கு போக்குவரத்து சீரமைக்கும் பணியில் இருந்த போக்குவரத்து போலீசார், வினோதனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு அறிவுரை கூறிய போலீசார், அவரது மனைவியை வரவழைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பண்ருட்டி 4 முனை சந்திப்பில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News