உள்ளூர் செய்திகள்
அ.ம.மு.க. சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்
- எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனைப் பிரச்சாரகூட்டம் நடைபெற்றது.
- குமாரசாமி மற்றும் மாவட்ட ,ஒன்றிய ,நகர நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பல்லடம் :
திருப்பூர் வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்லடம்,கரடிவாவி, லட்சுமி மில்,அருள்புரம், ஆகிய இடங்களில் தெருமுனைப் பிரச்சாரகூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில் தலைமை கழக பேச்சாளர் சுரேஷ் பேசினார். பல்லடம் நகர செயலாளர் கதிரவன்,ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார்,துரை பாண்டியன்,சிறுபான்மை பிரிவு ரபி அகமது மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் தண்டபாணி,குமாரசாமி மற்றும் மாவட்ட ,ஒன்றிய ,நகர நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.