உள்ளூர் செய்திகள்
ஐ.ஜே.கே.வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
- அலுவலகத்தில் நேரில் சந்தித்து தங்களை இந்திய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டனர்.
- மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணபிரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலைப்பேட்டை ,மடத்துக்குளம், தாராபுரம் பகுதியை சேர்ந்த மாற்று கட்சியினர் சக்தி பழனிச்சாமி தலைமையில் இன்று இந்திய ஜனநாயக கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் -திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் பி.என்.ஆர். பாரி கணபதியை அலுவலகத்தில் நேரில் சந்தித்து தங்களை இந்திய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டனர்.
அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் சோனை முத்து, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் கொங்கு வேலுச்சாமி, மாவட்ட துணை தலைவர் முருகேசன், மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் கிருபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணபிரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.