உள்ளூர் செய்திகள்

கடலூர் மாநகர அனைத்து அரசியல் கட்சிகள் குடியிருப்போர் சங்கங்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கடலூரில் வருகிற 28- ந்தேதி அனைத்து கட்சி சார்பில் ெரயில் மறியல் போராட்டம்

Published On 2022-06-16 08:32 GMT   |   Update On 2022-06-16 08:32 GMT
  • அனைத்து கட்சி சார்பில் ெரயில் மறியல் போராட்டம் வருகிற 28- ந்தேதி கடலூரில் நடக்கிறது.
  • கடலூர் -புதுச்சேரி இருப்புப்பாதை திட்டத்தை விரைந்து உருவாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலூர்:

கடலூர் மாநகர அனைத்து அரசியல் கட்சிகள் குடியிருப்போர் சங்கங்கள் ஆலோசனை கூட்டம் கடலூர் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநில செய லாளர் வக்கீல் சந்திர சேகரன், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் கண்ணன், அமர்நாத், குடியிருப்போர் சங்க பொதுச்செயலாளர் மருத வாணன், தலைவர் வெங்கடேசன், மாநகராட்சி கவுன்சிலர் அருள்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் சுந்தர ராஜன், மீனவர் விடு தலை வேங்கை மாநில நிர்வாகிகள் வெங்க டேசன், ரமேஷ், வி. சி. க நகர செயலாளர் செந்தில், , விவசாய சங்க மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில்கொரோனா ஊரடங்கு பிறகு இயக்கப்பட்ட கடலூர் திருப்பாப்புலியூர்ெரயில் நிலையத்தில் நின்று சென்ற மன்னார்குடி, காரைக்கால் விரைவு ரயில்கள் மீண்டும் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் உழவன் எக்ஸ்பிரஸ் இரண்டு வண்டிகளும் கடலூர் முதுநகர்ரயில் நிலை யத்தில் நின்று செல்வ தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் -புதுச்சேரி இருப்புப்பாதை திட்டத்தை விரைந்து உருவாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் மயிலாடுதுறை அனைத்து பாசஞ்சர் ரயில்களை முழுமையாக இயக்கிட வேண்டும் முதியோர் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சலுகை மீண்டும் அளிக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கை களை வலியுறுத்தி அனைத்து கட்சியின் சார்பில் வருகிற ஜூன் 28 ந்தேதி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது. இதற்கு அனைத்து பகுதி மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

Tags:    

Similar News