உள்ளூர் செய்திகள்

மத்தூர் பேருந்து நிலையத்தில் ஊத்தங்கரை தொகுதி

எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

மத்தூரில் அ.தி.மு.க. வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Published On 2022-09-03 14:26 IST   |   Update On 2022-09-03 14:26:00 IST
  • பொதுகுழு கூட்டியது செல்லாது என தீர்ப்பு வெளியானது.
  • ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பேருந்து நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அ.தி.மு.க. பொது குழு கூடியது குறித்து உயர்நீதிமன்றத்தில் ஒ .பன்னீர்செல்வம் மேல் முறையீடு செய்ததையடுத்து தனி நீதிபதி அளித்த தீர்ப்பில் பொதுகுழு கூட்டியது செல்லாது என தீர்ப்பு வெளியானது.

இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி மேல் முறையீடு செய்ததில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு செல்லாது என அறிவித்ததில் ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி (வடக்கு) தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம், மாவட்ட சிறுபாண்மை பிரிவு இணை செயலாளர் பியாரேஜான், ஒன்றிய கழக செயலாளர் தேவராசன் (தெற்கு ) , மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி, களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழழேந்தி, சிவம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் மனோகரன், ராமகிருஷ்ணம்பதி ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா ராமன் , ஒன்றிய அவைத் தலைவர் சென்னகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, மலர் கமலநாதன், கிருஷ்ணன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் முருகன், ஒன்றிய பொருளாளர் பழனி, மாவட்ட எம். ஜி.ஆர். மன்றத் துணைத் தலைவர் வினாயகமூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் மணி, கவுண்டனூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் வேலு, ஒன்றிய மீனவரணி செயலாளர் முனுசாமி, ஒன்றிய இளைஞர் அணி துணை செயலாளர் கேபிள் குமார், மாணவரணி முத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு திருமால், பூபதி, இளைஞர் பாசறை பாண்டியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News