உள்ளூர் செய்திகள்

கதவணை திட்ட பணிகளை நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அனிச்சம் பாளையம் பகுதியில்ஆய்வு செய்த போது எடுத்த படம்.

கதவணை திட்ட பணிகளை நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திடீர் ஆய்வு

Published On 2022-12-01 09:28 GMT   |   Update On 2022-12-01 09:28 GMT
  • கதவணை அமைக்கடும் பணிகள் 40 சதவீதத்திற்கு மேல் முடிவுற்றுள்ளது.இந்தப் பணிகளை தமிழக அரசின் நீர்வ ளத்துறை கூடுதல் தலை மைச் செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா நேரில் ஆய்வு செய்தார்.
  • பணிகளையும் எவ்வாறு தர கட்டுப்பாடு களுடன் செய்யப்படுகிறது என்பதை சம்பந்தப்பட்ட பொறியாளர்களிடம் கேட்டறிந்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட உத்தரவிட்டார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே

உள்ள அனிச்சம்பாளை யத்தில் இருந்து கரூர் மாவட்டம் நன்செய் புகளூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.389.00 கோடி மதிப்பில் புதிய கதவணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கதவனை 0.8 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் வலது புறம் உள்ள வாங்கல் வாய்க்கால் மூலம் 1458 ஏக்கர் பாசன நிலங்களும், இடது புறம் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டம் மோகனூர் வாய்க்கால் மூலம் 2583 ஏக்கர் பாசன நிலங்களும் பாசன வசதி பெரும் வகையில் அமைந்துள்ளது. இந்த கதவணை அமைக்கடும் பணிகள் 40 சதவீதத்திற்கு மேல் முடிவுற்றுள்ளது.இந்தப் பணிகளை தமிழக அரசின் நீர்வ ளத்துறை கூடுதல் தலை மைச் செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா நேரில் ஆய்வு செய்தார். அப்போது பணிகளின் தரம், பணிகளின் முன்னேற்றம், பணிகளை முடிக்க வேண்டிய காலம்.

ஒவ்வொரு பணிகளையும் எவ்வாறு தர கட்டுப்பாடு களுடன் செய்யப்படுகிறது என்பதை சம்பந்தப்பட்ட பொறியாளர்களிடம் கேட்டறிந்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது கரூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபு சங்கர்,நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் சுப்பிரமணியன், சிறப்பு திட்ட செயற்பொறியாளர் சாரா, உதவி செயற்பொறி யாளர்கள், உதவி பொறியா ளர்கள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News