உள்ளூர் செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சீனிவாசன்.

அனைத்து விவசாயிகளுக்கும் வேளாண் காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை

Published On 2023-01-16 08:50 GMT   |   Update On 2023-01-16 08:50 GMT
  • சீர்காழி வட்டாரத்தில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி வரலாறு காணாத வகையில் மழை பெய்தது.
  • வயல்களில் தண்ணீர் வடிந்த பிறகு கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட பெயர்களுக்கு ஹெட்ருக்கு ரூ. 13 500 நிவாரணத்தொகை தமிழக அரசு அறிவித்தது.

சீர்காழி:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

சீர்காழி வட்டாரத்தில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி வரலாறு காணாத வகையில் மழை பெய்தது.

இதனால் சீர்காழி, தரங்கம்பாடி தாலுக்காவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் சேதம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

பாதிப்பு குறித்து தமிழகம் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வருகை புரிந்து பார்வையிட்டு ஆய்வு செய்து இரண்டு வட்டங்களிலும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கினார்.

வயல்களில் தண்ணீர் வடிந்த பிறகு கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட பெயர்களுக்கு ஹெட்ருக்கு ரூ. 13 500 நிவாரணத்தொகை தமிழக அரசு அறிவித்தது.

இந்தத் தொகை பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு எந்த வகையிலும் போதாது.

தமிழக முதல்வர் நடப்பு ஆண்டுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்குவதற்கு அரசாணை வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியத்தில் 29 வருவாய் கிராமங்களுக்கும் செம்பனார்கோயில் ஒன்றியத்தில் 15 வருவாய் கிராமங்களுக்கும், கொள்ளிடம் ஒன்றியத்தில் 43 வருவாய் கிராமங்களக்கும் பயிர் காப்பீடு வழங்கப்படவுள்ளது சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் 153 வருவாய் கிராமங்களில் 87 வருவாய் கிராமங்களுக்கு மட்டுமே நடப்பு ஆண்டு பயிர் காப்பீடு வழங்கப்படுகிறது.

இதனால் மீதமுள்ள 65 வருவாய் கிராம விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவர் ஆகையால் மீதமுள்ள 65 கிராமங்களுக்கும் பாரபட்சமின்றி நடப்பாண்டு பயிர் காப்பீடு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News