பைக்கில் முந்தி செல்ல முயன்றபோது விபத்து: லாரி பின் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
- மணி அம்மாபேட்டை கடலூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வெங்காய மண்டியில் வேலை பார்த்து வருகிறார்.
- அவருக்கு முன்னால் சென்ற லாரியை மணி முந்தி செல்ல முயன்றார்.
சேலம்:
சேலம் அருகே உள்ள அயோத்தியாபட்டணம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் வசித்து வருபவர் மணி (வயது 36). இவருக்கு திருமணமாகி சித்ரா (25) என்ற மனைவி உள்ளார். மணி அம்மாபேட்டை கடலூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வெங்காய மண்டியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை மோட்டார் சைக்கிளில் உடையாப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு முன்னால் சென்ற லாரியை மணி முந்தி செல்ல முயன்றார். இதில் எதிர்பாராத விதமாக லாரியின் பக்கவாட்டில் உரசியதில், அவர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்து போன மணியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.