கிருஷ்ணகிரி நகரில் விபத்து: தனியார் பள்ளி ஆசிரியர் உடல் நசுங்கி சாவு -மற்றொரு விபத்தில் வாலிபர் பலி
- சம்பவ இடத்திலேயே சந்திர வன்னியம் மன்னட்டி உடல் நசுங்கி உயிரிழந்தார்.
- வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே நாராயணசாமி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டம் லிங்கேஸ்வரப்பெட்ட பகுதியை சேர்ந்தவர் சந்திர வன்னியம் மன்னட்டி (வயது 33).இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-சேலம் சாலையில் சென்னை பிரிவு ரோடு அருகே சென்று கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக வந்த டாரஸ் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சந்திர வன்னியம் மன்னட்டி உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே யுள்ள காமந்திரப்பள்ளி பகுதியை சேர்ந்த நாராயணசாமி (31) என்ற வாலிபர் தொரப்பள்ளி-கொத்தூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே நாராயணசாமி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.