சிவகிரி மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி சனி பிரதோஷ பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.
சிவகிரி, வாசுதேவநல்லூர் சிவன் கோவில்களில் ஆனி சனி பிரதோஷ பூஜை
- கோவில் உள்பிரகாரத்தில் சுவாமிகள் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
- சிவன், மீனாட்சி அம்மன், விநாயகர், முருகன், காவல் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.
சிவகிரி:
சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், திருநீலகண்ட சுவாமி - சமேத மீனாட்சியம்மன் கோவில், கருணையானந்தா சித்தர் கோவில், அழுக்கு சித்தர் சுவாமிகள் கோவில், ராமநாத சுவாமிகள் சித்தர் கோவில், நாதகிரி முருகன் கோவில், விஸ்வை அங்காள ஈஸ்வரி கோவில், தென்மலை திரிபுரநா தேஸ்வரர் சுவாமி - சிவபரிபூரணி அம்மன் கோவில், ராமநாதபுரம் சுயம்புலிங்க சுவாமி கோவில், தாருகாபுரம் மத்தியஸ்தநாத சுவாமி கோவில், வாசுதேவநல்லூர் அர்த்த நாரீஸ்வரர் கோவில், சிவகிரி அருகே சொக்க நாதன்புத்தூர் தவநந்தி கண்டேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் ஆனி மாதம் சனி மகா பிர தோஷ பூஜைகள் நடைபெற்றது.
பக்தர்களுக்கு காட்சி
சுவாமிகள் அலங்க ரிக்கப்பட்டு சப்பரத்தில் எழுத்தருளி கோவில் உள்பிரகாரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். சப்பரத்துக்கு முன்பாக தேவாரம் பக்திப் பாடல்கள் குழுவை சேர்ந்த குழுவினர் தேவார பக்தி பாடல்கள் பாடியபடி நூற்றுக்கணக்கான பெண்களுடன் முன்னே செல்ல சப்பரம் பின்னால் தொடர்ந்து வந்தது.
தீபாராதனை
பின்னர் சிவன், மீனாட்சி அம்மன், விநாயகர், முருகன், காவல் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. தொடர்ந்து நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர் போன்ற நறுமணப் பொருட்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பிரதோஷ பூஜை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு வெல்லம் அரிசி, பஞ்சாமிர்தம், புளி யோதரை, பொங்கல், பஞ்சாமிர்தம், தயிர்சாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.