உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி- குன்னுார் சாலையில் மரம் முறிந்து லாரி மீது விழுந்தது

Published On 2023-06-15 08:45 GMT   |   Update On 2023-06-15 08:45 GMT
  • கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
  • மரம் விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கோத்தகிரி-குன்னூர் சாலையில் உள்ள வண்டிச்சோலை பகுதியில், மதுபாட்டில்கள் ஏற்றி வந்த ஒரு டாஸ்மாக் லாரி, சாலை யோரம் நின்றது. அப் போது அங்கு இருந்த ஒரு ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் லாரியின் முன்பகுதி சேதம் அடைந் தது. இருந்தபோ திலும் டிரைவர், கண்டக்டர் இருவரும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பினர். கோத்தகிரி- குன்னூர் போக்குவரத்து சாலையில் மரம் விழுந்த தால், அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகு றித்து தகவல் அறிந்த தீய ணை ப்பு படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் வேகமாக மரத்தை அப்பு றப்படுத்தும் பணியில் ஈடுபட்டு சாலை யை சீர் செய்தனர்.

லாரியின் மேல் மரம் விழுந்த சம்பவம் அப்ப குதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News