உள்ளூர் செய்திகள்

கைதான கொள்ளையன்

நடிகர் வடிவேல் பாணியில் ஓட்டி பார்ப்பதாக கூறி காரை திருடி சென்ற கொள்ளையன் கைது

Published On 2022-12-15 06:48 GMT   |   Update On 2022-12-15 06:48 GMT
  • நடிகர் வடிவேல் பாணியில் ஓட்டி பார்ப்பதாக கூறி காரை திருடி சென்ற கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
  • திண்டிவனம் மேம்பாலம் கீழ் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

விழுப்புரம்:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதியை சேர்ந்தவர் அமர்ந்த லிங்கம் (வயது 25,) இவர் தனது மாருதி சுசுகி ஈகோ காரை 6 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்திருந்தார். இதனை பார்த்த சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த சுலைமான் என்பவர் திண்டிவ னத்திற்கு வந்து அந்த காரை வாங்கிக் கொள்வதாக கூறினார். அதன்பேரில் பெயரில் அமிர்தலிங்கம் செய்யாறு பகுதியில் இருந்து அந்த காரை திண்டிவனம் ெரயில் நிலையத்திற்கு எடுத்து வந்தார். அப்பொழுது சுலைமான் நடிகர் வடிவேல் பாணியில் அந்த காரை ஓட்டி பார்த்து வாங்கிக் கொள்வதாக கூறி அவரிடம் தனது ஆதார் கார்டை கொடுத்து காரை ஓட்டி சென்றுள்ளார். காரை எடுத்துச் சென்ற சுலைமான் வெகுநேரமாக வராததால் திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் அளித்தார்.

இது சம்பந்தமாக திண்டிவனம் ஏஎஸ்பி அபிஷேக் குப்தா, சப் இன்ஸ்பெக்டர் ஆனதராசன் தலைமையில் தனிப்படை அமைத்து சுலைமான் தந்தஆதார் கார்டில் இருந்த முகவரியில் போலீசார் விசாரித்ததில் அது போலியாக தயாரித்த ஆதார் கார்டு என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் சோதனை செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் திண்டிவனம் மேம்பாலம் கீழ் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.சென்னை நோக்கி வந்த காரை சோதனை செய்தனர். அப்போது அதில் நம்பர் பிளேட் மாறி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் அவர்கள் பாணியில் விசாரித்தனர். விசாரணையில் அவர் அமிர்த லிங்கத்திடம் காரை திருடி சென்றது விசாரணையில் தெரிய வந்தது. அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து காரை மீட்டு அவரை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News