உள்ளூர் செய்திகள்

தியாகதுருகத்தில் ஷேர் ஆட்டோ மீது புளியமரம் விழுந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

தியாகதுருகத்தில் விபத்து ஷேர் ஆட்டோ மீது விழுந்த புளியமரம்

Published On 2022-10-10 12:27 IST   |   Update On 2022-10-10 12:27:00 IST
  • தியாகதுருகம் பஸ் நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திம்மலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
  • அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே திம்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சியப்பன் (வயது 55). இவர் தனக்கு சொந்தமான ஷேர் ஆட்டோவில் தியாகதுருகம் பஸ் நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திம்மலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது தியாகதுருகம் புறவழிச்சாலை சந்திப்பு அருகே சென்றபோது லேசான காற்றுடன் மழை பெய்ததில் சாலையோரம் இருந்த 50 ஆண்டுகள் பழ–மை–யான புளிய மரம் திடீரென ஷேர் ஆட்டோவின் மீது சாய்ந்தது. இதில் ஆட்டோவில் சென்ற 5 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் மரக்கிளைகளுக்கிடையே சிக்கிக்கொண்டனர்.

அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலை அலுவலர் கவிதா, தீயணைப்பு வீரர் கார்த்தி–கேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மரக்கி–ளையை அப்புறப்ப–டுத்தி ஷேர் ஆட்டோவை வெளியே எடுத்தனர். சாலையோரம் இருந்த புளியமரம் ஷேர் ஆட்டோ–வில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News