நீளமான லாரியில் நீளமான காற்றாலை இறக்கையை கொண்டு சென்ற போது எடுத்த படம்.
நீளமான லாரியில் கொண்டு செல்லப்படும் காற்றாலை இறக்கை; போக்குவரத்து பாதிப்பு
- சுமார் 420 அடி நீள காற்றாலை விசிறியின் இறக்கையை, நீளமான லாரியில் ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வழியாக சென்றது.
- காற்றாலை இறக்கையை ஏற்றிச் செல்லும் இந்த லாரியை முந்தி செல்ல முடியாமல் நீண்ட வரிசை யில் அணிவகுத்து சென்றது.
பரமத்தி வேலூர்:
சேலம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சேலம் பகுதியில் இருந்து மதுரையை நோக்கி சுமார் 420 அடி நீள காற்றாலை விசிறியின் இறக்கையை, நீளமான லாரியில் ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வழியாக சென்றது. பரமத்தி வேலூர் போலீஸ் சோதனைச் சாவடி எதிரே செல்லும்போது, பின்னால் வந்த பஸ்கள், லாரிகள், கார்கள், வேன்கள் என ஏராளமான வாகனங்கள் காற்றாலை இறக்கையை ஏற்றிச் செல்லும் இந்த லாரியை முந்தி செல்ல முடியாமல் நீண்ட வரிசை யில் அணிவகுத்து சென்றது.
இதனால் நீண்ட நேரம் சேலம்-கரூர் தேசிய
நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வாகன ஓட்டி கள், பஸ் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியா மல் அவ திப்பட்டனர். காற்றாலை விசிறியை பகல் நேரத்தில் ஏற்றிக்கொண்டு செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்த லாரிகள் இரவு 11 மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றால்போக்குவரத்து பாதிப்பு இருக்காது. எனவே இறக்கையை கொண்டு செல்லும் லாரிகளை இரவு நேரங்களில் இயக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.