உள்ளூர் செய்திகள்

மாணவன் கமல்நாத்துக்கு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட காட்சி. 

ஏற முயன்றபோது தவறி விழுந்தான் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கிய 7-ம் வகுப்பு மாணவன்

Update: 2022-09-27 07:53 GMT
  • கமல்நாத் பண்ருட்டி முத்தையர் மேல்நிலைப்பள்ளியில் 7-ம்வகுப்பு படித்து வருகிறான்.
  • ஓடிஏறுவதற்காக முயற்சித்தபோது தவறிவிழுந்தான். பஸ் சக்கரம் அவரது வலது தொடையில் ஏறியது.

கடலூர்:

பண்ருட்டி அருகே சின்னசேமக் கோட்டையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் என்பவர் மகன் கமல்நாத் (12). இவர் பண்ருட்டி முத்தையர் மேல்நிலைப்பள்ளியில் 7-ம்வகுப்பு படித்து வருகிறான். இவன் நேற்று மாலை பள்ளி முடித்து வீட்டிற்கு செல்வதற்காக பண்ருட்டி நகராட்சி பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தான். அப்போது அரசுபேருந்து வழித்தடம் எண் 8 பி பஸ் வந்தது. அந்த பஸ், பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது.

அதில்ஓடிஏறுவதற்காக முயற்சித்தபோது தவறிவிழுந்தான். பஸ் சக்கரம் அவரது வலது தொடையில்ஏறியது.இதனால்படுக்காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவனை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டார். அங்குஅவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், ரங்கநாதன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News