உள்ளூர் செய்திகள்
- கிருஷ்ணகிரி அருகே மின்னல் தாக்கி 9 ஆடுகள் பலி ஆனது.
- பேரிடர் நிவாரண நிதி மூலம் நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை-
கிருஷ்ணகிரி வட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள திம்மசந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். விவசாயி.
இவர் சொந்தமான சுமார் 50 ஆடுகளை வளர்த்து வருகிறார். அந்த ஆடுகளை நேற்று மாலை 5 மணியளவில் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மேய்த்து கொண்டு இருந்தார். அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.இதில் ஆடுகளின் மீது திடீரென மின்னல் தாக்கியதில் 9 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டது. மேலும் 2 ஆடுகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இறந்த ஆடுகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை வந்த பின்பு பேரிடர் நிவாரண நிதி மூலம் நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என கிருஷ்ணகிரி வட்டாட்சியர் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.