உள்ளூர் செய்திகள்

தேனி அருகே குன்னூர் பகுதியில் வீடுகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டிருப்பதை கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டார்.

75-வது சுதந்திர தினத்தையொட்டி வீடுகளில் ஏற்றப்பட்ட தேசியக் கொடிகள்

Update: 2022-08-14 04:10 GMT
  • ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட குன்னூர், இந்திராநகர், பிச்சம்பட்டி, சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் இல்லங்களில் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளதை கலெக்டர் பார்வையிட்டார்.
  • பொதுமக்கள் தங்களது வீடுகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவினை சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

தேனி:

75-வது சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழாவினை முன்னிட்டு தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட குன்னூர், இந்திராநகர், பிச்சம்பட்டி, சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் இல்லங்களில் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.

மத்திய, மாநில அரசுகளின் அறிவுரையின்படி, 75-வது சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு, சுதந்திரத்திருநாள் - அமுதப்பெருவிழா தமிழகம் முழுவதும் அனைத்து அரசுத்துறைகளின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளின் வாயிலாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனைத்தொடர்ந்து தமிழகமெங்கும் நாட்டுப்பற்றினை பறைசாற்றும் விதமாக பொதுமக்களின் பங்களிப்புடன் கொண்டாடிடும் வகையில், தேனி மாவட்டத்திலுள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப்பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்கள், அரசு சார் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் 3 நாட்களுக்கு தேசிய கொடியினை ஏற்றிடும் வகையில். விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் இல்லங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தங்களது வீடுகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவினை சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

Tags:    

Similar News