உள்ளூர் செய்திகள்
விவசாயி ஞானசேகர் வீட்டு தோட்டத்தில் விளைந்த 5 அடி உயர முருங்கை காய்கள்.

விவசாயி வீட்டு தோட்டத்தில் 5 அடி நீள முருங்கை காய்கள்

Published On 2022-07-07 12:41 IST   |   Update On 2022-07-07 12:41:00 IST
  • ஞானசேகர் தன்னுடைய நிலத்தில் கரும்பு, நெல், மரவள்ளி உள்ளிட்டவை சாகுபடி செய்து வருகிறார்.
  • முருங்கை மரத்தை இயற்கை முறையில் தொழு உரம், புண்ணாக்கு உள்ளிட்டவை வைத்து பராமரித்து வருகிறார்.

புதுச்சேரி:

புதுவை மண்ணாடிப்பட்டு அருகே உள்ள சுத்துக்கேணி கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகர்.

விவசாயியான இவர் தன்னுடைய நிலத்தில் கரும்பு, நெல், மரவள்ளி உள்ளிட்டவை சாகுபடி செய்து வருகிறார். இவரது வீட்டு தோட்டத்தில் முருங்கை மரம் வைத்துள்ளார்.

இந்த முருங்கை மரத்தை இயற்கை முறையில் அதாவது தொழு உரம், புண்ணாக்கு உள்ளிட்டவை வைத்து பராமரித்து வருகிறார்.

இதில் தற்போது முருங்கைக்காய்கள் காய்த்துள்ளது. ஒவ்வொரு காயும் குறைந்தபட்சம் 5 அடி நீளம் உள்ளது. இது அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சாதாரணமாக ஒரு முருங்கைக்காய் அதிகபட்சம் 2 அடி இருக்கும்.

ஆனால், ஞானசேகரன் தோட்டத்தில் இருக்கும் முருங்கைக்காய்கள் 5 அடி நீளம் இருப்பதால் அதனை அப்பகுதி மக்கள் அதிசயத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

இதுகுறித்து விவசாயி ஞானசேகர் கூறுகையில், இயற்கை முறையில் பயிர் பாதுகாப்பு செய்யப்பட்டு வரும் இந்த முருங்கை 5 அடி நீளமுள்ள காய்கள் காய்த்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அனைவரும் வந்து இதனை ஆச்சரியத்துடன் பார்த்து செல்வதாகவும் இந்த மரத்திலிருந்து பதிவு போட்டு தங்களுக்கு தருமாறு கேட்டு செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News