கோப்பு படம்
தேனி அருகே குடும்ப பிரச்சினையில் 4 பேர் தற்கொலை
- தேனி அருகே குடும்ப பிரச்சினையில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
கடலூர் மாவட்டம் பென்னாடம் அடுத்துள்ள திட்டக்குடியை சேர்ந்தவர் நாசர் (வயது50). இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனைவி மற்றும் மகளுடன் உத்தமபாளையம் பி.டி.ஆர். காலனியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.
சம்பவத்தன்று ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உத்தமபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜெயமங்களம் அருகில் உள்ள மேல்மங்களம் அம்மாபட்டி ெதருவை சேர்ந்த முருகன் மனைவி போதுமணி (வயது36). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆண்டிபட்டி அருகில் உள்ள குமணன்தொழு 1வது வார்டை சேர்ந்த சிவலிங்கம் மனைவி அழகம்மாள் (56). இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வந்தார். நோய் குணமாகாததால் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராஜதாணி அருகில் உள்ள பழையகோட்டை நடுத்தெருவை ேசர்ந்த வேலுச்சாமி மனைவி வேலுத்தாய் (76). இவரும் உடல்நலக்குறைவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.