கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தொ.மு.ச., சார்பில் கொடியேற்று விழா - அன்னதானம்
திருப்பூர்:
மின்சார வாரிய தொ.மு.ச. சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று காலை திருப்பூர் பி.என் ரோடு மேட்டுபாளையம் பஸ் நிறுத்தம் எதிரிலுள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தொ.மு.ச. பேரவை கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
மேலும் திருப்பூர் மாவட்ட தொ.மு.ச. சார்பில் அனுப்பர்பாளையம், ஆத்துபாளையம், வேலம்பாளையம், போயம்பாளையம், ஆர் .கே .நகர், பி.என்., சாலை, அவினாசி , பெருமாநல்லுர் உட்பட மாவட்ட பகுதியிலுள்ள மின்வாரிய அலுவலக பகுதிகளில் தொ.மு.ச. பேரவை கொடியேற்றுவதற்கான ஏற்பாடுகளை செயலாளர் ஈ.பி.அ.சரவணன் செய்திருந்தார்.
தொடக்க நிகழ்ச்சியாக திருப்பூர் பி .என் சாலை மேட்டுபாளையம் பஸ் நிறுத்தம் எதிரிலுள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகில் அமைக்கப்பட்ட தொ.மு.ச. பேரவை கொடி கம்பத்தில் ஈ.பி.அ.சரவணன் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.
அதனை தொடர்ந்து போயம்பாளையம் ஆர். கே. நகர் மின்சார வாரிய பிரிவு அலுவலக பகுதியிலுள்ள தொ.மு.ச. பேரவை கொடியை ஆறுமுகம் ஏற்றி வைத்து தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு, அன்னதானம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மின்சார வாரிய தொ.மு.ச . இளைஞர் அணி தங்கராசு, பெருமாநல்லூர் செந்தில் (எ) பழனிசாமி, ஆர். கே. நகர் ஜோதிபாசு, 10-வது வார்டு செயலாளர் ரத்தின சாமி, 7-வது வட்ட செயலாளர் செல்வராஜ், தயானந்தம், சில்வர் சரவணன், அம்மன் நகர் செல்வம், சின்னதுரை, நாகராஜ், ராஜேஷ், உட்பட கழக நிர்வாகிகளும் தொ.மு.ச.நிர்வாகிகளும் ,மின்சார வாரிய தொழிலாளர்களும் ,தொண்டர்களும் கலந்து கொண்டனர்.