உள்ளூர் செய்திகள்
குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

குமாரபாளையத்தில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2022-06-02 13:42 IST   |   Update On 2022-06-02 13:42:00 IST
குமாரபாளையத்தில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
குமாரபாளையம்:

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மூலமாக ஆய்வு செய்ததில், நாமக்கல் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 201 குழந்தைகள் வயதிற்கேற்ற எடையின்மை, உயரமின்மை மற்றும் மெலிவு தன்மை ஆகிய குறைபாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த மே 24ந் தேதி முதல் ஒரு மாதத்திற்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, இது போன்ற குழந்தைகளுக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்க தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கண்ணகி நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
Tags:    

Similar News