உள்ளூர் செய்திகள்
புதுவை சுற்றுலாத் துறை முதுநிலை மேலாளர் சிதம்பரத்திற்கு, யோகா சேவகா விருதினை, பாலாஜி வித்யா பீத் டீன் ஆனந்தகிர

மண்டல அளவிலான யோகா போட்டி

Published On 2022-06-02 06:26 GMT   |   Update On 2022-06-02 06:26 GMT
மண்டல அளவிலான யோகா போட்டியில் 165 மாணவர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி:

பாலாஜி வித்யாபீத், யோகா சிகிச்சை கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் யோகா போட்டி நடந்தது. இதில் புதுவை சுற்றுலாத் துறையின் முதுநிலை மேலாளர் சிதம்பரம், யோகாவுக்கு ஆற்றிய சேவைகளை பாராட்டி ‘யோகா சேவகா விருது’ வழங்கப்பட்டது.

ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் டீன் ஆனந்த கிருஷ்ணன், பதிவாளர் சீனிவாசன், யோகா சிகிச்சை கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஆனந்த பாலயோகி பவனானி ஆகியோர் விருது வழங்கி பாராட்டினர். மண்டல அளவிலான ேயாகா போட்டகளில் 165-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திறமையை வெளிப்படுத்தினர். சித்திர்பூமி புதுவை யோகாசன விளையாட்டு சங்கத்தின் யோகா நடுவர்கள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

சங்க மூத்த துணைத் தலைவர் கஜேந்திரன் துணைத் தலைவர் தேவசேனா பவனானி, பொருளாளர் சண்முகம், இணைச் செயலாளர் சதீஷ்குமார், மூத்த உறுப்பினர்கள் செந்தில் குமார், லலிதா சண்முகம், கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கவுரவிக்கப்பட்டனர்.

ஏற்பாடுகளை யோகா சிகிச்சை கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் தயாநிதி மற்றும் யோகா ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News