உள்ளூர் செய்திகள்
அமைச்சர் கீதாஜீவன் மருத்துவ கல்லூரி முதல்வரிடம் மின் விசிறிகள் மற்றும் ஹீட்டர்களை வழங்கிய காட்சி.

கருணாநிதி பிறந்தநாள் விழா ஜூன் மாதம் முழுவதும் கொண்டாட்டம்- அமைச்சர் கீதாஜீவன் பேட்டி

Published On 2022-06-01 14:33 IST   |   Update On 2022-06-01 14:33:00 IST
கருணாநிதி பிறந்தநாள் விழா ஜூன் மாதம் முழுவதும் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பா ளரும், சமூகநலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவிற்கு 50 மின் விசிறிகள் மற்றும் 4 வாட்டர் ஹீட்டர்களை வழங்கினார்.

இதில், மாநகரட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மருத்துவமனை டீன் நேரு, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மருத்துமனை கண்காணிப்பாளர் டாக்டர் குமரன்,  மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், துணை அமைப்பாளர் பெருமாள், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவிந்திரன், கவுன்சிலர் விஜயலட்சுமி,

மாவட்ட பிரதிநிதி கதிரேசன், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பட், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், துரை, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடந்து அமைச்சர் கீதாஜீவன் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் உள்ள உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகளை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். மேலும் மருத்துவமனை வளாகத்தில் இருந்து கழிவு நீர் வெளியேறும் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரும், தமிழக வரலாற்றில் இடம்பெற்ற தலைவருமான கலைஞரின் 99-வது பிறந்த நாள் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி கொண்டாடப்பட்ட உள்ளது. 3-ந் தேதி கலைஞரின் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது.

இதற்காக அனைத்து துறைகளும் தயாராகி வருகிறது. தி.மு.க சார்பிலும் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் ஜூன் மாதம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News