உள்ளூர் செய்திகள்
தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன்.

கீழப்பாவூரில் நாளை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்-சிவபத்மநாதன் அறிக்கை

Published On 2022-05-30 15:16 IST   |   Update On 2022-05-30 15:16:00 IST
கீழப்பாவூரில் நாளை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது என தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் அறிக்கையில் கூறியுள்ளார்.
வீ. கே. புதூர்:

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன்  வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சண்முகையா தலைமையில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி அளவில் கீழப்பாவூரில் சுரண்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ள எஸ்.கே.டி. திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

 இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் குறித்து ஆலோசிக்கப்பட  உள்ளது. கூட்டத்தில் தி.மு.க.   நிர்வாகிகள், முன்னாள் இந்நாள் எம்.பி, எம்.எல்.ஏக்கள், சார்பு அணி நிர்வாகிகள்,மாவட்ட பிரதிநிதிகள், தொண்டர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News