உள்ளூர் செய்திகள்
யூக வணிகத்தில் இருந்து பருத்தியை நீக்க வேண்டும்-மத்திய நிதி அமைச்சரிடம் பியோ தலைவர் வலியுறுத்தல்
மூலப்பொருட்களுக்கான இறக்குமதி வரியை விலக்கியதற்காகவும் அமைச்சருக்கு சக்திவேல் நன்றி தெரிவித்தார்.
திருப்பூர்:
இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்தார்.அப்போது, அவர்ஆயத்த ஆடை உற்பத்தி மூலப்பொருட்களான பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதி கொள்கையில் மறு சீரமைப்பு அவசியம்.
பருத்தி விலையின் ஸ்திரத்தன்மைக்கு, யூக வணிகம் பெரும் தடையாக உள்ளது. எனவே யூக வணிகத்தில் இருந்து பருத்தியை நீக்கவேண்டும் என நிதி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரும்பு துறை சார்ந்த மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு வரி விதித்ததற்கும், சில முக்கியமான மூலப்பொருட்களுக்கான இறக்குமதி வரியை விலக்கியதற்காகவும் அமைச்சருக்கு சக்திவேல் நன்றி தெரிவித்தார்.