உள்ளூர் செய்திகள்
குத்துக்கல் வலசையில் இலவச கண் பரிசோதனை முகாம்
குத்துக்கல் வலசையில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
தென்காசி:
தனியார் கண் மருத்து வமனை மற்றும் அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை ஊராட்சி வேதம்புதூர் கிராமத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு கல்லூரி தாளாளர் டாக்டர் புதிய பாஸ்கர் முன்னிலை வகித்தார் . கல்லூரி முதல்வர் டாக்டர் சேவியர் இருதயராஜ் வாழ்த்துரை வழங்கினார்.
முகாமினை குத்துக்கல் வலசை ஊராட்சி மன்றத் தலைவர் சத்யராஜ், துணைத்தலைவர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முகாமில் குத்துக்கல் வலசை ஊராட்சிக்குட்பட்ட பல கிராமங்களில் இருந்து வந்த திரளான பொது மக்களுக்கு கண் பரிசோதனை செய்யப் பட்டது.
முகாமிற்கான ஏற்பாடுகளை விரிவுரையாளர் திருமலைக்குமார் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.