உள்ளூர் செய்திகள்
பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்கப்பட்டது.

தீர்வாய கணக்கு முடித்தல்

Published On 2022-05-28 14:40 IST   |   Update On 2022-05-28 14:40:00 IST
வலங்கைமானில் தீர்வாய கணக்கு முடித்தல் இறுதி நாள் நிகழ்ச்சியில் 48 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
நீடாமங்கலம்:

வலங்கைமான் தாலுகா அலுவலகத்தில் பசலி 1431ஆம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாய கணக்கு முடித்தல் நடைபெற்று வருகிறது. 
 
இறுதி நாள் நிகழ்ச்சியில் வலங்கைமான்   வருவாய் தீர்வாயத்தில் பெறப்பட்ட இலவச வீட்டுமனைபட்டா, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட  232 மனுக்களில் 48மனுக்களுக்கு உடன் தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் ஆய்வு செய்து தீர்வு காணப்படும் என தாசில்தார் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் வலங்கைமான் தாசில்தார் சந்தானகோபாலகிருஷ்னன் முன்னிலை வகித்தார். தனி தாசில்தார் தேவகி, மண்டல துணை தாசில்தார் ஆனந்தன், வருவாய் ஆய்வாளர்கள் சுகுமார், ராஜ்குமார், பழனிச்சாமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News