பிரான்ஸ் ஆடை கண்காட்சி: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்க அழைப்பு
திருப்பூர்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில், கூஸ் நெக்ஸ்ட் கண்காட்சி, வரும் செப்டம்பர் 2-ந்தேதி தொடங்கி 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது.கடந்த 2020 ல், பிரான்ஸின் மொத்த இறக்குமதி ரூ.ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 600 கோடி.
இதில் இந்தியாவின் பங்களிப்பு 4.16 சதவீத அளவே உள்ளது. அதேபோல், அந்நாட்டின் ஆயத்த ஆடை இறக்குமதியில்இந்தியாவின் பங்களிப்பு 4.13 சதவீதமாக உள்ளது.சீனா, வியட்நாம் போன்ற போட்டி நாடுகளை ஒப்பிடும்போது பிரான்ஸ் சந்தையில் வரிச்சலுகைகளால் இந்திய நிறுவனங்களுக்கு எந்த பாதகமும் இல்லை.
பிரான்ஸ் நாட்டுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே திருப்பூர் உள்பட நாடுமுழுவதும் உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் பாரீஸ் கண்காட்சியில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டும் என, ஏ.இ.பி.சி., வேண்டுகோள்விடுத்துள்ளது.
கண்காட்சி மூலம், புதிய வர்த்தகர்களுடனான தொடர்பு ஏற்படுத்தி பிரான்ஸ் நாட்டுக்கான ஏற்றுமதியை உயர்த்த முடியும். கண்காட்சியில் அரங்கம் அமைக்க ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 15-ந்தேதிக்குள் பதிவு செய்வோருக்கு 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்யப்படுகிறது. விவரங்களுக்கு, 0421 2232634, 99441 81001, 94430 16219 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஏ.இ.பி.சி., நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.