உள்ளூர் செய்திகள்
தஞ்சை ராஜப்பா பூங்காவில் உள்ள நவீன பொழுதுபோக்கு மையத்தை மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்து சிறுவர்களுக்கு இனிப்

சிறுவர்களுக்கான நவீன பொழுதுபோக்கு மையம் திறப்பு

Published On 2022-05-27 10:16 GMT   |   Update On 2022-05-27 10:16 GMT
தஞ்சை ராஜப்பா பூங்காவில் சிறுவர்களுக்கான நவீன பொழுதுபோக்கு மையத்தை மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர்:

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ராஜப்பா  பூங்கா ரூ.3.80 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டது. இதனை கடந்த ஆண்டு இறுதியில் தஞ்சைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதையடுத்து ராஜப்பா பூங்காவில் கூடுதலாக சிறுவர்களுக்கான நவீன பொழுதுபோக்கு மையம் ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த நவீன பொழுதுபோக்கு மையத்தை இன்று மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார். மேலும் ராஜப்பா பூங்காவும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி க்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ஆணையர் சரவணக்குமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த பொழுதுபோக்கு மையத்தில் சிறுவர்களை கவரும் விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. பள்ளி சீருடை அணிந்து வரும் சிறுவ-சிறுமிகளுக்கு கட்டணம் கிடையாது. 

இநிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் மேத்தா, புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News