உள்ளூர் செய்திகள்
மேற்கு மண்டல கூட்டத்தில் மேயர் இந்திராணி பேசினார். அருகில் மண்டல தலைவர் சுவிதா விமல், உதவி ஆணையர் தட்சிணாமூர்த

அடிப்படை வசதிகள் கேட்டு கவுன்சிலர்கள் கோரிக்கை

Published On 2022-05-26 10:37 GMT   |   Update On 2022-05-26 10:37 GMT
மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல கூட்டத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருப்பரங்குன்றம்

மதுரை திருப்பரங்கு ன்றத்தில் மாநகராட்சியின்  மேற்கு மண்டல கவுன்சிலர்கள் கூட்டம் இன்று நடந்த. மண்டல தலைவர் சுவிதா விமல் தலைமை வகித்தார். உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். மேயர் இந்திராணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், பொதுமக்கள் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள்கேட்டு கோரிக்கை வைக்கின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் நாங்கள் கூறினால் நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும் பல இடங்களில் குப்பைகள் அள்ளாததால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. 

சில இடங்களில் அதிகாரிகள் தூய்மைப் பணியாளர்கள் சரிவர பணிக்கு வருவதில்லை வராமலேயே வருகைப்பதிவேட்டில் வந்ததாக தெரிவிக்க ப்படுகிறது. எனவே இது போன்ற முறைகேடுகளை தவிர்த்து பொது மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தரவேண்டும் என தெரிவித்தனர். 

இதற்கு மேயர் இந்திராணி பதில் அளித்து பேசுகையில், கவுன்சிலர்கள் பொது மக்களின் அடிப்படை தேவைகளை கோரிக்கையாக வைக்கின்றனர். அவர்களது கோரிக்கையை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்தால்தான் அவர்களால் மீண்டும் மக்களை சந்திக்க முடியும். மக்களுக்கு தேவையான குடிநீர் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றார். 

இதில் கவுன்சிலர்கள் இந்திராகாந்தி, விஜயா, கருப்பசாமி, சிவசக்தி ரமேஷ், ரவிச்சந்திரன், ஸ்வேதா சத்யன், இன்குலாப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News