உள்ளூர் செய்திகள்
தூர்வாரப்படாமல் செடிகள் மண்டிய நிலையில் உள்ள வாய்க்கால்.

வாய்க்காலை தூர்வார வேண்டும் - கிராமமக்கள் கோரிக்கை

Published On 2022-05-26 08:54 GMT   |   Update On 2022-05-26 08:54 GMT
வடக்குமாங்குடி பகுதியில் வாய்க்காலை தூர்வார வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மெலட்டூர்:

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடி பகுதியின் முக்கிய வடிகால் வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத காரணத்தினால் தேவையற்ற செடி, கொடிகள் ஏராளமாக மண்டியுள்ளது. இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாமலும், மழைக்காலங்களில் வடிகால் ஆக பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளது. 

மேலும் இப்பகுதியில் பல இடங்களில் வாய்க்காலின் பெரும் பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், மழைகாலங்களில் குடியிறுப்பு பகுதியில் மழைநீர் புகுந்து தெருக்களில் தேங்கி நிற்கிறது.இதனால் பல்வேறு தொற்று நோய்கள் கிராமங்களில் பரவ காரணமாக அமைகிறது. மேலும் வடக்குமாங்குடி கடைவீதி பகுதியில் வாய்க்காலின் பெரும்பகுதியை சிலர் ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளதால் மழை காலங்களில் மழைநீர் செல்வது தடைபடுகிறது. வடிகால் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரிட வேண்டி கிராமமக்கள், பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்துறையினரிடம் பல வருடமாக வலியுறுத்தி வருகின்றனர்.

ஆற்றில் தண்ணீர் திறப்பதற்கு முன்பே ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News