உள்ளூர் செய்திகள்
மீன்பிடிக்க தடை

மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி

Published On 2022-05-26 06:08 GMT   |   Update On 2022-05-26 06:08 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 37,986 பேருக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி கடந்த ஆண்டை விட 3 ஆயிரம் போ் அதிகமானது.
ராமநாதபுரம்

தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களில் கடந்த ஏப்ரல் 15 முதல் வரும் ஜூன் 14-ந்தேதி இரவு வரையில் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீன் இனப்பெருக்க காலம் என்பதால் மீன்பிடிப்பை தடை செய்து அரசு அறிவித்துள்ளது. 

அதனடிப்படையில் கடலோர வல்லம் மீன்பிடிப்பு தவிர விசைப்படகுகள் மீன்பிடிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களிலும் மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரத்து 365 மீனவா்கள் தடைக்காலத்தில் மீன்பிடி தொழில் இன்றி பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 

அவா்களுக்கு தலா ரூ.5ஆயிரம் வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் மாநிலம் முழுவதும் மொத்தம் ரூ90.10 கோடி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 37ஆயிரத்து 986 மீனவா்களுக்கு நடப்பு ஆண்டில் மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி வழங்கப்படுகிறது. 

 கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் 3 ஆயிரம் போ் அதிகமாக நிதி பெறுவதாக மீன்வளத்துறை மாவட்ட துணை இயக்குநா் காத்தவராயன் தெரிவித்தாா்.

Tags:    

Similar News