உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒரு மாதத்திற்கு பின்னர் 5 யூனிட்டுகளும் இயக்கம்

Published On 2022-05-25 09:59 GMT   |   Update On 2022-05-25 09:59 GMT
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒரு மாதத்திற்கு பின்னர் 5 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி தொடங்கியது.
தூத்துக்குடி:

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 5 மின்உற்பத்தி யூனிட்டுகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. அதேபோல் காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பு காரணமாகவும் கடந்த ஒரு மாதமாக பிற்பகல் தொடங்கி இரவு வரை மட்டுமே அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பின்னர் இன்று அதிகாலை முதல் வழக்கம் போல தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள   5 யூனிட்டுகளும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் முழு மின்உற்பத்தியான 1050 மெகாவாட் தினமும் உற்பத்தி செய்யப்படுகிறது.
Tags:    

Similar News