உள்ளூர் செய்திகள்
நெமலி அருகே அக்னி வசந்த விழா நடைபெற்றது அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ ரவி வருகை புரிந்தார்

நெமலி அருகே அக்னி வசந்த விழா

Published On 2022-05-24 16:24 IST   |   Update On 2022-05-24 16:24:00 IST
நெமலி அருகே அக்னி வசந்த விழா நடைபெற்றது.
நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ துரவுபதி அம்மன் சமேத பஞ்சபாண்டவர் கோவிலில் அக்னி வசந்த பெருவிழா நடைபெற்றது. 

கடந்த சித்திரை மாதம் 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் தினமும் தனியார் டி.வி. புகழ் போ.ஜெயமூர்த்தி சொற்பொழிவு திருவண்ணாமலை மாவட்டம் பூதேரி பிள்ளைபாக்கம் கட்டை கூத்து நாடகம் நடைபெற்றது.

திருவிழாவின் கடைசி நாளான நேற்று காலையில் துரியோதனன் படுகளம் மாலையில் தீமிதி திருவிழாவும் சிறப்பாக நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். 

பின்னர் பக்தர்கள் தீ மிதித்தனர் நிகழ்ச்சியில் அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ ரவி வருகை புரிந்தார் அவருக்கு பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது மேலும் நிகழ்ச்சியின் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம் ஊராட்சி மன்ற துணை தலைவர் அசோகன் நாட்டாண்மை தாரர்கள் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News