உள்ளூர் செய்திகள்
விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

தேனீ வளர்ப்பு பயிற்சி

Published On 2022-05-24 10:25 GMT   |   Update On 2022-05-24 10:25 GMT
மதுக்கூர் அருகே விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மதுக்கூர்:

மதுக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திவெட்டி ஊராட்சியில் அத்திவெட்டி ஊராட்சி மன்றமும் அசிசிஸ்ட் தொண்டு நிறுவனமும் இணைந்து தேனீ வளர்ப்பு வைத்திய முறை நடைபெற்றது. 

முதல் கட்டமாக விவசாயிகளுக்கு நீர்வள முக்கியமானது என்பதால் நீர் வளத்திற்குரிய முயற்சி எடுக்கப்பட்டது. 

இந்த விவசாயத்திற்கு பயிர் நன்றாக வளர்வதற்கு மகரந்த சேர்க்கை நடைபெறுவதற்கு தேனீயும் ஒரு பங்காக அமைகின்றது. இதனை அடுத்து அத்திவெட்டி ஊராட்சியில் அனைத்து விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கு உரிய நீர் வளத்தைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

பயிற்சியாளர் செல்வகுமார் முயற்சியில் விவசா–யிகளுக்கு, பொதுமக்களுக்கு பயன் தரும் வகையில் அத்திவெட்டி ஊராட்சி மன்றமும்அசிசிஸ்ட் தொண்டு நிறுவனமும் இணைந்து விவசாயிகளுக்கு தேனீக்களின் நன்மை–களை எடுத்துக் கூறியும் தேனீக்களை வளர்ப்பத–ற்கான பயிற்சியும் நடை–பெற்றது.  

இந்த பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயி–களுக்கு பயிற்சிக்கான சான்றிதழும் ஒரு விவசா–யிக்கு இரண்டு தேனி வளர்ப்பு பெட்டிகளும் வழங்கப்படும் என்பதை அடுத்து அனைத்து விவசா–யிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News