உள்ளூர் செய்திகள்
சந்திரன் எம்.எல்.ஏ. பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

திருத்தணி கோவிலில் ரூ.150 கட்டண தரிசனத்தை திடீரென நிறுத்தியதால் பக்தர்கள் வாக்குவாதம்- சந்திரன் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை

Published On 2022-05-24 15:02 IST   |   Update On 2022-05-24 15:02:00 IST
திருத்தணி கோவிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது. வழக்கமாக இலவச தரிசனம் மற்றும் ரூ.150 சிறப்பு கட்டண தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

திருத்தணி:

திருத்தணி முருகன் கோவில் பிரசித்திபெற்றது. இங்கு தினந்தோறும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் பக்தர்கள் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.வாரத்தில் செவ்வாய்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில் செவ்வாய்கிழமையான இன்று சாமி தரிசனம் செய்ய திருத்தணி கோவிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது. வழக்கமாக இலவச தரிசனம் மற்றும் ரூ.150 சிறப்பு கட்டண தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால் இன்று காலை கூட்டம் அதிகமாக இருந்தால் ரூ.150 சிறப்பு கட்டணத்தில் பக்தர்கள் அனுமதிப்பது திடீரென நிறுத்தப்பட்டது. சிறப்பு கட்டண டிக்கெட் வழங்கப்பட்டதால் பக்தர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

அவர்கள் அங்கிருந்து கோவில் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது திருத்தணி எம்.எல்.ஏ சந்திரன் கோவிலுக்கு வந்து இருந்தனர். அவர்கள் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைதொடர்ந்து பக்தர்கள் சமாதானம் அடைந்தனர். பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு சிறப்பு கட்டணம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பக்தர்கள் சுமார் 2 மணி நேரத்தற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News