உள்ளூர் செய்திகள்
பா.ஜனதா ஓ.பி.சி., அணி ஆலோசனை கூட்டம்
மத்திய அரசின் சாதனைகளை விளக்கி மாவட்டம் மற்றும் தொகுதி அளவில் சாதனை விளக்க நிகழ்ச்சி நடத்த பா.ஜனதா ஓ.பி.சி., அணி முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி:
பா.ஜனதா மாநில ஓ.பி.சி., அணி ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினர்.
இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 8 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களை மக்களிடம் ெகாண்டு செல்வது சம்பந்தமாக விவாதிக்கப் பட்டது. மாவட்டம் மற்றும் தொகுதி அளவில் சாதனை விளக்க நிகழ்ச்சிகளை நடக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
ஓ.பி.சி., அணி பொதுச் செயலாளர்கள் சரவணகுமார். கிருஷ்ணராஜ், துணைத் தலைவர்கள் சதாசிவம், செல்வராஜ், செயலாளர்கள் வேல்முருகன், பாலபாஸ்கர், ராமஜெயம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும், மாவட்டத் தலைவர்கள் வெங்கடேசன், பிரபாகர், லட்சுமி சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.