உள்ளூர் செய்திகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது மத்திய அரசு, குறைப்பது மாநில அரசா?- அண்ணாமலைக்கு அமைச்சர் கேள்வி

Published On 2022-05-23 04:06 GMT   |   Update On 2022-05-23 04:06 GMT
சுகாதார துறையில் உள்ள காலிப் பணியிடங்களில் 4 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி:

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் புதிய வகை தொற்று பரவல் இல்லை. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று 50-க்கு கீழே தான் உள்ளது.

சுகாதார துறையில் உள்ள காலிப் பணியிடங்களில் 4 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது மத்திய அரசு. குறைப்பது மாநில அரசுகளா? என பிற மாநிலங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

இதை பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை மனதில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக விமான நிலையத்தில் அவரை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.

Tags:    

Similar News