உள்ளூர் செய்திகள்
பெருமாள் என்கிற பிரகாஷ் போக்சோவில் கைது.

சிங்காரப்பேட்டை அருகே 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு- போச்சோவில் கல்லூரி மாணவன் கைது

Published On 2022-05-18 15:40 IST   |   Update On 2022-05-18 15:40:00 IST
சிங்காரப்பேட்டை அருகே 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி மாணவனை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரபேட்டை கேத்தநாய்கன்பட்டியை சேர்ந்த பெருமாள் ( எ) பிரகாஷ் (வயது19). இவர் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் பாலி டெக்னிக் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகின்றார்.

இவன் கடந்த மாதம் கேத்தநாயக்கம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில்  ஏழாம் வகுப்பு படி்த்து வரும் 12 வயது சிறுவனை  தகாத முறையில் பிரகாஷ் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டார். 
பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர்கள் சிங்காரப்பேட்டை  போலீசில் புகார் அளித்தனர். 

அதன் பேரில் போலீசார் ரகாசை கைது செய்து  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News