உள்ளூர் செய்திகள்
கெலமங்கலத்தில் ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் தேர் திருவிழா
கெலமங்கலத்தில்ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ பட்டாளம்மன் தேர்திரு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
அதனை சுற்றி உள்ள 11 கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற இந்த திருவிழாவில் கிடா வெட்டி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பட்டாளம்மன் திருக்கோ வில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் கெலமங்கலம், ஜுபி, தொட்டே காணப் பள்ளி, செட்டிபள்ளி, குந்துமாரணப்பள்ளி, ஜக்கேரி உட்பட 11 கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற இந்த திருத்தேரோட்டம் நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் மாவிளக்கு பூஜைகள் நடைபெற்றன.
பிறகு அம்மனுக்கு நேர்த்திக் கடனாக சுமார் 50க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாக்கள் வெட்டி படையல் இட்டு வழிபாடுகள் நடைபெற்றன.
இதனை எடுத்து அலங்கரித்து வைக்க ப்பட்டிருந்த உற்சவ அம்மனை திருத்தேரில் அமர்த்தி மங்கள ஆரத்தி நடைபெற்றது.
தொடர்ந்து, தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், பேராட்சி தலைவர் கே.பி. தேவராஜ், அறநிலைதுறை அதிகாரிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்தது.
இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம், நீர்மோர், பானக்கம் வழங்கப்படது.