உள்ளூர் செய்திகள்
நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.

திருமானூரை தலைமையிடமாக கொண்டு தனி வருவாய் வட்டம்

Published On 2022-05-18 14:20 IST   |   Update On 2022-05-18 14:20:00 IST
திருமானூரை தலைமையிடமாக கொண்டு தனி வருவாய் வட்டம் ஏற்படுத்த தீர்மானம் நிறைவேற்றினர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம், அரியலூர் மாவட்டம் திருமானூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தே.மு.தி..க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், திருமானூர் பகுதியில் வரும் 25 ஆம் தேதி கட்சி நிர்வாகிகளின் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும் 

தே.மு.தி..க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, அரியலூர் மாவட்டம், திருமானூரை தலைமையிடமாகக் கொண்டு தனி வருவாய் வட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமானூரில் அதிநவீன அரிசி ஆலை, தீயணைப்பு நிலையம், மகளிர் கல்லூரி உள்ளிட்டவைகள் அமைக்க வேண்டும். திருமானூர் கொள்ளிட ஆற்றில் மணல் அள்ளுவதை அனுமதிக்கக் கூடாது. நத்தியார் கால்வாயை தூர்வாரி மதகு அமைக்க வேண்டும். 

திருமானூர் பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கூட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள் ராஜ்குமார், ஜெகதீசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.மாவட்ட செயலர் இராம.ஜெயவேல் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் அக்கட்சியின் அனைத்து பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News