உள்ளூர் செய்திகள்
ஓசூரில் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2022-05-17 10:19 GMT   |   Update On 2022-05-17 10:19 GMT
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஓசூர், 

பொதுவாக கோடைகாலம் என்றாலே, சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைத்துவிடும். குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டாலே, மக்கள் அலறுவார்கள். ஆனால் இந்தாண்டு, கோடைகாலத்திலும், அதிலும் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளிலேயே பல்வேறு இடங்களில் கனமழை பொழிந்து, பொதுமக்களின் வாட்டத்தை போக்கி, நிம்மதியை தந்துள்ளது. 

தொடர்ந்து வெப்பச்சலனம் காரணமாக, கடந்த சில நாட்களாக  மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கனமழை மற்றும் பரவலாகவும் மழை பெய்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாலையில் பலத்த காற்று வீசி சாரல் அடிக்க தொடங்கியது. சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கி, நேரம் செல்லச்செல்ல மழையின் வேகம் அதிகரித்து சுமார் 1 மணி நேரம் கன மழை பெய்தது.

 இதன் காரணமாக தாழ்வான பகுதிகளி மழைநீர் தேங்கியும், ஓசூர்-பாகலூர் ரோடு சர்க்கிள், ராயக்கோட்டை சாலை சர்க்கிள், பழைய நகராட்சி அலுவலக முன்புறம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் முழங்கால் அளவு தேங்கி நின்றதால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதியடைந்தனர். 
இதே போல், ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் , தனியார் கம்பெனி எதிரில் உள்ள பாலத்தில் மழைநீர் வெள்ளம்போல் காட்சியளித்து, சாலையே தெரியாத அளவிற்கு மழைநீர் தேங்கி நின்றது. 

இதனால் வாகன ஓட்டிகள், வண்டிகளை ஓட்டிச்செல்ல தடுமாறினார்கள். மேலும் வாகனங்களும் மழைநீரில் தத்தளித்தவாறு சென்றன. ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில், பரவலாகவும், விட்டுவிட்டும் இரவு வரை மழை பெய்தவாறு இருந்தது. ஓசூரில் நேற்று 17 மி.மீ மழை பெய்தது.

அதே போல் நேற்று முன்தினம் இரவு நல்ல மழை பெய்தது நேற்று மதியம் 2 மணி அளவில் சூளகிரி சுற்றுவட்டாரமான பேரிகை, அத்தி முகம், மாரண்டபள்ளி, மருதாண்டபள்ளி, காமன்தொட்டி, வேம்பள்ளி, சென்னப் பள்ளி, மற்றும் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருவதால் விளைநிலங்களில் தக்காளி, கோஸ்,கொத்தமல்லி, பூதினா, மற்றும்தோட்டக்களில்   மழை நீர் தேங்குவதால் சேதமாகிவருகிறது பொதுவாக கீரை,காய்கறி விலை எகிறியது.

 இந்த நிலையில் தொடர்மழையால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மற்றும் கத்திரி வெயில் ஆரம்பநாள் முன்பே மழை பெய்துவருவதால் வெயில் தாக்கம் அடியோடு குறைந்து குளிர்ச்சிஏற்ப்பட்டு வருகிறது.

இதே போல் தருமபுரி மாவட்டத்திலும் நேற்று இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் பல இடங்களில் மழை பெய்துள்ளது. தொடர்ந்து கடந்த சில தினங்களாக பெய்து வரும் இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News